/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் கடை பணியாளர் ஆர்ப்பாட்டம்
/
ரேஷன் கடை பணியாளர் ஆர்ப்பாட்டம்
ADDED : மே 10, 2024 11:25 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட அரசு ரேஷன்கடை பணியாளர் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டர் அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. மாநில துணைத்தலைவரும்ராமநாதபுரம் மாவட்ட தலைவருமான தினகரன் தலைமை வகித்தார். மாநில செயலாளர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் ஞானசேகரன் முன்னிலை வகித்தனர்.
இதில் பொதுவினியோக பொருட்களுக்கு அபராத தொகை மூன்று மடங்காக உயர்த்தி பிறப்பித்த ஆணையை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். பொது வினியோக திட்டத்திற்கு தனித் துறை அமைக்க வேண்டும். உணவுபொருட்கள் அனைத்தும் சரியான எடையில் பொட்டலமாக வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாவட்ட பொருளாளர் செல்வம் உட்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.