/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஆர்ப்பாட்டம்
/
ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஏப் 30, 2024 12:07 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் சார்பில் மாவட்ட ஊராட்சியில் அலுவலக உதவியாளர் துர்கா மீது வழக்குப்பதிவு செய்துள்ளதை கண்டித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில்உதவியாளராக பணியாற்றும் துர்கா மீது நிதிமுறைகேடு தொடர்பாக மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
பி.டி.ஓ., ராஜேந்திரன்தலைமை வகித்தார். பி.டி.ஓ., ராஜேஸ்வரி துணை பி.டி.ஓ., விஜயகுமார் முன்னிலை வகித்தனர்.
அதிகாரிகள் செய்த தவறை மறைப்பதற்காக உதவியாளர் துர்கா மீது வழக்குப்பதிவு செய்துஉள்ளதை கண்டிக்கிறோம்.அதனை உடனடியாக வாபஸ்பெற வேண்டும் என வலியுறுத்தினர்.
இதே போல ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பி.டி.ஓ., செந்தாமரை செல்வி, துணை பி.டி.ஓ.,க்கள் ஜெகன், ஜீவா, அலுவலர்கள் பங்கேற்றனர்.
மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாநிலச் செயலாளர் சோமசுந்தரம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

