/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
/
இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்கு பதிவு செய்ய கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 12, 2024 11:49 PM
ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் தென் தமிழர் கட்சி மற்றும் அமைப்புக்களை சேர்ந்தவர்கள் தமிழக மீனவர்கள் படகு மீது மோதி கொலை செய்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தென் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பாலமுரளி தலைமை வகித்தார்.
முக்குலத்தோர் எழுச்சிக்கழகம் மாநில பொதுச்செயலாளர் கவிக்குமார், தாய் தமிழர் கட்சி மாநில தலைவர் பீமா பாண்டியன், மக்கள் பாதை மாவட்ட பொறுப்பாளர் ராவணக்குமார் உட்பட பலர் பங்கேற்றனர்.
இதில் தமிழக மீனவர்கள் மீது கப்பலால் மோதி கொலை செய்த இலங்கை கடற்படையினர் மீது கொலை வழக்குப்பதிவு செய்து கைது செய்ய வேண்டும்.
மீன் பிடி தடைக் காலத்தில் வழங்கப்படும் நிவாரணத்தொகையை நாள் ஒன்றுக்கு 500 ரூபாயாக வழங்க வேண்டும்.
இலங்கையில் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.