/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதல் பணியாளர் நியமிக்க ஆர்ப்பாட்டம்
/
கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதல் பணியாளர் நியமிக்க ஆர்ப்பாட்டம்
கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதல் பணியாளர் நியமிக்க ஆர்ப்பாட்டம்
கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதல் பணியாளர் நியமிக்க ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 27, 2024 11:34 PM

கடலாடி : அரசின் கனவு இல்லம் திட்டத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரி கடலாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மதிய உணவு இடைவேளையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு ஊழியர் சங்க தலைவரான துணை வட்டார வளர்ச்சி அலுவலர் முனியசாமி தலைமை வகித்தார். துணை பி.டி.ஓ., ஆனந்தகுமார் முன்னிலை வகித்தார். அரசின் கனவு இல்லம் திட்டத்திற்கு கூடுதல் பணியாளர்களை நியமிக்காததால் அரசு நிர்ணயித்த வேலை நேரத்தை காட்டிலும் கூடுதலாக இரவும் பகலும் வேலை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
தலைமையிடத்தில் இருந்து அடிக்கடி பணி விபரம் குறித்த அறிக்கை கேட்டு நெருக்கடி செய்கின்றனர். இதனால் ஏராளமான பணியாளர்கள் மன உளைச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். எனவே அரசின் திட்டத்திற்கு ஏற்ப கூடுதல் பணியாளர்களை நியமித்தால் இத்திட்டம் எளிதில் மக்களை சென்றடைய வாய்ப்பு உள்ளது என்றனர்.