/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆனந்துார் ஊராட்சி செயலர் மீது தாக்குதல் நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

ADDED : மே 24, 2024 02:22 AM

ராமநாதபுரம்: -ஆனந்துார் ஊராட்சி செயலாளர் செய்யது அப்தாகீர் மீது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி ஊராட்சி செயலாளர்கள் சங்கத்தினர் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகம் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மாநில துணைத்தலைவர் நாகேந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் செந்தில் பொன்குமார், செயலாளர் முருகன் முன்னிலை வகித்தனர். ஆர்.எஸ்.மங்கலம் ஒன்றிய தலைவர் சிலம்பரசன் வரவேற்றார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத்தலைவர்கள் துாத்துக்குடி கற்குவேல், சிவகங்கை பாக்கியராஜ், விருதுநகர் கணேச பாண்டியன், மாநில பொதுச்செயலாளர் வேல்முருகன், ஊராட்சி செயலாளர் சங்கத்தின் மாநிலத்தலைவர் ஜான்போஸ்கோ பிரகாஷ் உட்பட நிர்வாகிகள் பங்கேற்று பேசினர்.
மண்டபம் ஒன்றிய தலைவர் ராஜாமணி நன்றிகூறினார்.
ஆர்ப்பாட்டத்தில் ஆனந்துார் ஊராட்சி செயலாளர் செய்யது அபுதாகீர் மிது தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.