/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தெய்வேந்திரநல்லுார் கிராமத்தில் அடிப்படை வசதிகள் மறுப்பு கிராம மக்கள் அவதி

ADDED : ஏப் 27, 2024 04:06 AM
பரமக்குடி: பரமக்குடி அருகே போகலுார் ஒன்றியம் தெய்வேந்திரநல்லுார் கிராமத்தில் அடிப்படை வசதிகளின்றி கிராம மக்கள்அவதிப்படுகின்றனர்.
தெய்வேந்திரநல்லூர் கிராமத்தில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் திறக்கப்படாமல் உள்ளதால் தனியாரிடம் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலை உள்ளது. இதே போல் திருவாடி, மாவிளங்கை கிராமத்திலும் குடிநீர் இல்லை. மேலும் தேசிய நெடுஞ்சாலை இருந்து கிராமத்திற்கு செல்லும் சாலை பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.
கிராமத்தில் முக்கிய நீர் ஆதாரமாக கருதப்படும் கண்மாய் பல ஆண்டுகளாக துார்வாரப்படாமல் குப்பை நிறைந்து துர்நாற்றம் வீசுகிறது. இதே போல் ஊராட்சி கட்டடமும் இடிக்கப்பட்ட நிலையில் கட்டப்படாமல் உள்ளது.
பயணிகள் நிழற்குடை உள்ளிட்ட எந்த கட்டமைப்பு வசதிகளும் செய்யப்படாததால் மக்கள்மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இது குறித்து முதல்வரின் இணையதளத்திற்கு கிராம மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால் மாவட்ட நிர்வாகம் உடனடியாக கவனிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.