/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பருத்தியில் புழுவை கட்டுப்படுத்த பறவைக்கூடு செயல்முறை விளக்கம்
/
பருத்தியில் புழுவை கட்டுப்படுத்த பறவைக்கூடு செயல்முறை விளக்கம்
பருத்தியில் புழுவை கட்டுப்படுத்த பறவைக்கூடு செயல்முறை விளக்கம்
பருத்தியில் புழுவை கட்டுப்படுத்த பறவைக்கூடு செயல்முறை விளக்கம்
ADDED : மே 18, 2024 04:15 AM
ரெகுநாதபுரம் : -ரெகுநாதபுரத்தில் பருத்தி புழுவை கட்டுப்படுத்த செயல்முறை விளக்கம் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.
கிராமப்புற வேளாண் பணி அனுபவத் திட்டத்தில் மதுரை வேளாண்மை கல்லுாரி மாணவி சுமதி பருத்திச் செடியில் தாக்குதலில் ஈடுபடும் புழுவை கட்டுப்படுத்த ஆங்கில எழுத்து 'டி' வடிவ பறவைக் கூடு அமைத்தல் முறை பற்றி விவசாயிகளிடம் எடுத்துக் கூறினார். ஒரு ஏக்கருக்கு 8 முதல் 15 வரை பறவைக்கூடு அமைத்தல் வேண்டும். அந்த பறவைக் கூட்டில் இளைப்பாற வரும் பறவைகள் பருத்தி காட்டில் உள்ள புழுவை உண்ணுவதன் மூலம் புழுவை கட்டுப்படுத்தலாம் என்ற செயல்முறை விளக்கத்தை ஏராளமான விவசாயிகள் கேட்டு தெளிவு பெற்றனர்.