ADDED : மே 25, 2024 05:36 AM
முதுகுளத்துார் : முதுகுளத்துார் ஒன்றிய கிராமங்களில் நடக்கும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் விஷ்ணுசந்திரன் ஆய்வு செய்தார்.
முதுகுளத்துார் அருகே விளக்கனேந்தல் ஊராட்சியில் புதிய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, நல்லுார் ஊராட்சியில் ஊராட்சி அலுவலக கட்டடம், அங்கன்வாடி மைய கட்டடம், ரேஷன்கடை கட்டடம், பொசுக்குடி ஊராட்சியில் கூடுதல் வகுப்பறை கட்டடம், பயணிகள் நிழற்குடை, அங்கன்வாடி கட்டடம் உள்ளிட்ட பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
முதுகுளத்துார் ஒன்றியத்தில் பல்வேறு கிராமங்களில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் ரூ.1 கோடியே 4 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் நடந்து வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்தார். பின் பணிகளை உரிய காலத்திற்குள் முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட வேண்டும். அவ்வப்போது பணிகள் குறித்து அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து கண்காணிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் விஷ்ணுசந்திரன் உத்தரவிட்டார். பி.டி.ஓ.,க்கள் ஜானகி, அன்புகண்ணன், பொறியாளர்கள் சுபாஷ்குமார், சரிகா ஆனந்தி உட்பட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.

