/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பக்தர்கள் தங்கும் விடுதி; ராமேஸ்வரத்தில் பொலிவு
/
பக்தர்கள் தங்கும் விடுதி; ராமேஸ்வரத்தில் பொலிவு
ADDED : மார் 10, 2025 05:47 AM

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் கேட்பாரற்று கிடந்த பக்தர்கள் இலவச தங்கும் விடுதியை கோவில் நிர்வாகம் புதுப்பித்துள்ளது.
ராமேஸ்வரம், ராமநாதசுவாமி கோவிலுக்கு வெளியூர்களில் இருந்து வரும் பக்தர்கள் ஓய்வெடுக்க இலவச விடுதி இன்றி, தனியார் விடுதியில் அதிக கட்டணத்தில் தங்கினர்.
இதை தவிர்க்க, 2017ல் ஹிந்து அறநிலையத்துறை சார்பில் 1.50 கோடி ரூபாயில் ராமேஸ்வரம் ரயில்வே ஸ்டேஷன் அருகில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்களுக்கு இலவச தங்கும் விடுதி அமைத்தனர்.
ஆனால், இங்கிருந்து கோவிலுக்கு செல்ல அரசு பஸ் போக்குவரத்து இல்லாததாலும், 2022 டிச., முதல் ராமேஸ்வரத்திற்கு ரயில் சேவை ரத்தானதாலும், விடுதியில் தங்குவதை பக்தர்கள் முற்றிலும் தவிர்த்தனர். இதனால் விடுதி பராமரிப்பின்றி முடங்கியது.
இந்நிலையில், இம்மாதம் ராமேஸ்வரத்திற்கு ரயில் போக்குவரத்து துவங்க உள்ளதால், தங்கும் விடுதியை புதுப்பிக்க கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் உத்தரவிட்டார். சில நாள்களாக விடுதியை புதுப்பொலிவுடன் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது.