/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி ஜீவாநகர் முருகன் கோயிலில் பூக்குழி விழா வேல் குத்தி இறங்கிய பக்தர்கள்

ADDED : மார் 25, 2024 05:41 AM

பரமக்குடி : பரமக்குடி நகராட்சி ஜீவாநகர் முருகன் கோயிலில் பங்குனி உத்திர விழாவையொட்டி பூக்குழி உற்ஸவம் நடந்தது.
எமனேஸ்வரம் ஜீவாநகர் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் 101 வது ஆண்டு பங்குனி உத்திர விழா நடந்தது. காலை 10:00 மணிக்கு எமனேஸ்வரம் ஆதிநாராயணன் பிள்ளையார் கோயிலில் இருந்து பால் காவடிகள் எடுத்தும், வேல் குத்தியும் பக்தர்கள் புறப்பட்டனர்.
தொடர்ந்து நுாற்றுக்கும் மேற்பட்ட ஆண், பெண் பக்தர்கள் பால்குடம் சுமந்து நயினார்கோவில் ரோடு வழியாக ஜீவாநகர் வீதிகளில் சென்று மதியம் 1:30 மணிக்கு கோயில் முன்பு வந்தடைந்தனர். பக்தர்கள் அனைவரும் பக்தியுடன் பூக்குழியில் இறங்கி சுவாமியை தரிசித்தனர்.
மேலும் பாலசுப்பிரமணிய சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு மேல் மூலவருக்கு புஷ்பாஞ்சலி நடந்தது. பக்தர்கள் அன்னதானம், நீர் மோர் வழங்கினர்.