/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சேத்தாண்டி வேடம் அணிந்த பக்தர்கள்
/
சேத்தாண்டி வேடம் அணிந்த பக்தர்கள்
ADDED : ஆக 18, 2024 04:08 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி : -கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டி கிராமத்தில் கரியமல்லம்மாள் கோயில் ஆடிப்பொங்கல் முளைப்பாரி விழா காப்பு கட்டுதலுடன் துவங்கியது.
தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் 508 விளக்கு பூஜை, சக்தி கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது.
அக்னி சட்டி, ஆயிரம் கண் பானை மற்றும் பக்தர்கள் உடல் முழுவதும் சேற்றை பூசி சேத்தாண்டி வேடம் அணிந்து கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக வந்து கோயிலில் நேர்த்திகடன் செலுத்தினர்.
கரியமல்லம்மாள் அம்மனுக்கு பால், சந்தனம்,மஞ்சள், திரவியபொடி உட்பட 21 வகை அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது.