/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் பாதயாத்திரை
/
பால்குடம் எடுத்து வந்து பக்தர்கள் பாதயாத்திரை
ADDED : மே 10, 2024 04:47 AM

கமுதி: கமுதி அருகே அபிராமம் பாதயாத்திரை குழு சார்பில் மேலக்கொடுமலுார் குமரக்கடவுள் முருகன் கோயிலில் 36ம் ஆண்டு சித்திரை கார்த்திகை விழா நடந்தது.
இதனை முன்னிட்டு அபிராமம் துர்கை அம்மன் கோயிலில் உற்ஸவர் முருகன் மின்னொளி அலங்காரத்தில் தேரில் ஊர்வலம் நடந்தது.
காப்பு கட்டிய பக்தர்கள் பால்குடம்,அலகு குத்தியும், வேல் காவடி எடுத்து சுப்பிரமணிய சுவாமி கோயில், பஸ் ஸ்டாண்ட், கமுதி- மதுரை சாலை வழியாக மேலக்கொடுமலுார் குமரக் கடவுள் முருகன் கோயிலுக்கு 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் பாத யாத்திரையாக சென்றனர்.
மூலவரான முருகனுக்கு எலுமிச்சம், பழச்சாறு, திரவியப் பொடி, நெல்லிப்பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், ஆரஞ்சு, மாதுளை, பழம் வகைகள், இளநீர் உட்பட 33 வகை அபிஷேகங்கள் நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது.
கமுதி, அபிராமம் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.