/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடல்
/
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடல்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடல்
ராமேஸ்வரம் அக்னி தீர்த்தத்தில் பக்தர்கள் புனித நீராடல்
ADDED : டிச 01, 2024 02:30 AM

ராமேஸ்வரம்:கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான பக்தர்கள் புனித நீராடினார்கள்.
நேற்று கார்த்திகை அமாவாசையில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் ராமேஸ்வரம் வந்தனர். முன்னோர் ஆன்மா சாந்தியடைய வேண்டி கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் திதி, தர்ப்பணம் செய்தனர்.
பின் அக்னி தீர்த்த கடலில் நீராடி, கோயில் வளாகத்தில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடினார்கள்.
கோயிலில் சுவாமி, அம்மன் சன்னதியில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.
இது போன்ற விழா நாட்களில் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் முதல் கோயில் மேலவாசல், அக்னி தீர்த்த கடற்கரை வரை போக்குவரத்து இடையூறு ஏற்படும்.
ஆனால் நேற்று போக்குவரத்து போலீசார் வாகனங்களை மாற்று வழியில் அனுப்பி ஒழுங்குபடுத்தியதால் வாகன நெரிசல் இன்றி பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்து சென்றனர்.