/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆக.30ல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்
/
ஆக.30ல் குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்
ADDED : ஆக 24, 2024 03:30 AM
ராமநாதபுரம்: மாவட்டத்தில் குழந்தைகள், மாணவர்களுக்கு ஆக., 30ல் தேசிய குடற்புழு நீக்கும் முகாம் நடக்கிறது.
மாவட்டத்தில் ஒன்று முதல் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்கள், பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகள் 3 லட்சத்து 69 ஆயிரத்த 750 பேர் உள்ளனர். இவர்களுக்கு அல்பன்டசோல் மாத்திரை (குடற்புழு நீக்க மாத்திரை) வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லுாரிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் மற்றும் அனைத்து அங்கன்வாடிகளிலும் வழங்கப்படும்.
பொதுமக்கள் தங்கள் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை பயன்பெறலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

