ADDED : மே 12, 2024 01:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முதுகுளத்துார்:முதுகுளத்துார்--கடலாடி சாலை காவல்காரன் சந்தில் உள்ள தர்ம முனீஸ்வரர் கோயில் வருடாபிஷேக விழா நடந்தது.
இதனை முன்னிட்டு மே 3ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. தினந்தோறும் தர்ம முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடந்தது. கோயில் வளாகத்தில் 108 விளக்கு பூஜை நடந்தது.
பின்பு கிடா வெட்டி பொங்கல் வைத்து நேர்த்திகடன் செலுத்தினர். மூலவரான தர்ம முனீஸ்வரருக்கு பால், சந்தனம், மஞ்சள், திரவிய பொடி உட்பட 21 வகையான அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது.
கமிட்டியாளர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
விழாவில் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டனர்.