/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தர்ம முனியய்யா கோயில் வருடாபிஷேக விழா
/
தர்ம முனியய்யா கோயில் வருடாபிஷேக விழா
ADDED : ஜூன் 24, 2024 11:44 PM

கீழக்கரை : கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி தொண்டாலை மேலக்கரையில் தர்ம முனியய்யா கோயிலில் திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.
இரண்டாம் ஆண்டு வருடாபிஷேக விழாவை முன்னிட்டு மூலவர் தர்ம முனியய்யாவிற்கு பால், பன்னீர், இளநீர், மஞ்சள் பொடி, திரவியப் பொடி உள்ளிட்ட 16 வகை சிறப்பு அபிஷேகம் மற்றும் பஞ்சமுக தீபாராதனைகள் நடந்தது.
முன்னதாக கோயில் வளாகத்தில் நேற்று காலை 9:00 மணிக்கு விநாயகர் பூஜை, கும்ப பூஜை, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம் உள்ளிட்ட யாக வேள்விகள் நடந்தது.
புனித நீரால் மூலவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேகம் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை ஓய்வு (எஸ்.ஐ.,) பாலகிருஷ்ணன் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.