/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
முதுகுளத்துார் சப் ஜெயில் தொடர்ந்து வேண்டும் தர்மர் எம்.பி., கோரிக்கை
/
முதுகுளத்துார் சப் ஜெயில் தொடர்ந்து வேண்டும் தர்மர் எம்.பி., கோரிக்கை
முதுகுளத்துார் சப் ஜெயில் தொடர்ந்து வேண்டும் தர்மர் எம்.பி., கோரிக்கை
முதுகுளத்துார் சப் ஜெயில் தொடர்ந்து வேண்டும் தர்மர் எம்.பி., கோரிக்கை
ADDED : மார் 07, 2025 08:12 AM
முதுகுளத்துார் : தமிழ்நாட்டில் நிர்வாக காரணத்தால் சிறைச்சாலைகளை குறைக்கும் திட்டத்தில் முதுகுளத்துார் கிளை சிறைச்சாலை இருப்பதால் இத்திட்டத்தை தமிழக சிறைத்துறை கைவிட வேண்டும் என்று எம்.பி., தர்மர் கோரிக்கை விடுத்தார். அவர் கூறியதாவது:
முதுகுளத்துாரில் 1872ம் ஆண்டு கிளை சிறைச்சாலை அமைக்கப்பட்டது. 152 ஆண்டுகளாக சிறைச்சாலை இயங்கி வருகிறது. முதுகுளத்துார் சட்டசபை தொகுதியில் கடலாடி, முதுகுளத்துார், கமுதி தாலுகாக்களிலும் மூன்று நீதிமன்றங்கள் உள்ளது. இங்கு 1600க்கும் மேற்பட்ட வழக்குகள் நடக்கிறது.
கமுதி டி.எஸ்.பி., கட்டுப்பாட்டில் 5 ஸ்டேஷன்களும், முதுகுளத்துார் டி.எஸ்.பி., கட்டுப்பாட்டில் 7 போலீஸ் ஸ்டேஷனும், கீழக்கரைடி.எஸ்.பி., கட்டுப்பாட்டில் 3 போலீஸ் ஸ்டேஷன், கமுதி, முதுகுளத்துார் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன், மதுவிலக்கு போலீஸ் இதேபோன்று பரமக்குடி, பார்த்திபனுார், சத்திரக்குடி என 25 போலீஸ் ஸ்டேஷன் உள்ளடக்கியதாக முதுகுளத்தூர் கிளை சிறைச்சாலை திகழ்கிறது.
தமிழ்நாட்டில் நிர்வாக காரணத்தால் கிளை சிறைச்சாலைகள் குறைக்கும் திட்டத்தில் முதுகுளத்துார் கிளை சிறைச்சாலை இருப்பது தெரிய வருகிறது. இத்திட்டத்தை அரசு கைவிட வேண்டும். பல கிளை சிறைகளில் அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் போதுமானதாக இல்லை.
முதுகுளத்தூர் போலீஸ் ஸ்டேஷன் அருகே புதிய சிறைச்சாலை கட்டும் அளவிற்கு தேவையான அரசு காலியிடம் இருக்கிறது. இங்கு புதிய சிறைச்சாலை அமைக்க வேண்டும் என்றார்.