/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கண்மாய் வரத்துக் கால்வாய்களை துார்வார விவசாயிகள் கோரிக்கை
/
கண்மாய் வரத்துக் கால்வாய்களை துார்வார விவசாயிகள் கோரிக்கை
கண்மாய் வரத்துக் கால்வாய்களை துார்வார விவசாயிகள் கோரிக்கை
கண்மாய் வரத்துக் கால்வாய்களை துார்வார விவசாயிகள் கோரிக்கை
ADDED : ஜூலை 22, 2024 04:31 AM
கமுதி: -கண்மாய்களுக்குரிய நீர்வரத்து வாய்க்கால் துார்வார வேண்டும். மழைநீரை சேகரிக்க ஷட்டர் பழுதை சரிசெய்ய வேண்டும் என வைகை--கிருதுமால்-குண்டாறு இணைப்பு கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கமுதியில் வைகை--கிருதுமால்-குண்டாறு இணைப்பு கால்வாய் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
மண்டல செயலாளர் குருசாமி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மலைச்சாமி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விருதுநகர் மாவட்டம் பரளச்சி அருகே கஞ்சம்பட்டி கண்மாயிலிருந்து வெளியேறும் மழைநீரை சேமிக்கும் வகையில் கண்மாய்களுக்கு வரும் நீர் வழித்தடங்களை துார்வார வேண்டும்.
கஞ்சம்பட்டி கண்மாயிருந்து தண்ணீர் வெளியேற இடையூறாக இருக்கும் கிழக்கு பகுதி ஷட்டர் அகற்ற வேண்டும்.
ராமநாதபுரம் கண்மாயில் இருந்து உபரியாக கடலுக்கு செல்கின்ற தண்ணீரை அளவீடு செய்து பார்த்திபனுார் மதகு அணையில் இருந்து பரளை கால்வாய் வழியாக கொண்டு செல்ல வேண்டும்.
இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுவிக்க வேண்டும். கச்சத்தீவை மீட்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கமுதி, கடலாடி, முதுகுளத்தூர் நிர்வாகிகள்,விவசாயிகள் பங்கேற்றனர்.