/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
துார்ந்து போன கழிவுநீர் கால்வாயால் சிரமம்
/
துார்ந்து போன கழிவுநீர் கால்வாயால் சிரமம்
ADDED : ஆக 29, 2024 05:00 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கமுதி: கமுதி பேரூராட்சி மேலத்தெருவில் கழிவுநீர் கால்வாய் துார்ந்து போனதால் குப்பை தேங்கி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.
கமுதி பேரூராட்சி 1-வது வார்டு மேலத்தெருவில் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர். வீடுகளின் கழிவுநீர் செல்வதற்காக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கால்வாய் அமைக்கப்பட்டது. முறையாக மராமத்து பணி செய்யப்படாததால் கால்வாய் துார்ந்து போனது.
கழிவுநீர் செல்ல வழியின்றிகுப்பைதேங்கியுள்ளது. துர்நாற்றம் ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே கால்வாய் மராமத்து பணி செய்து கழிவுநீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்தனர்.