/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் திக்கு விஜயம் இன்று அம்பாள் தபசு திருக்கோலம்

ADDED : ஏப் 20, 2024 05:06 AM

பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரை திருவிழாவில் நேற்று திக்குவிஜயம் நடந்தது.
பரமக்குடி விசாலாட்சி அம்பிகை, சந்திரசேகர சுவாமி கோயிலில் சித்திரைதிருவிழா நடத்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சுவாமி அம்பாள் தனித்தனியாக ரிஷப வாகனத்தில் வலம் வந்தனர்.
தொடர்ந்து நேற்று காலை சிவகாம சுந்தரி, நடராஜர் மூர்த்தி முக்கிய வீதிகளில் திக்கு விஜயம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.
தொடர்ந்து இரவு 7:00 மணிக்கு பிரியா விடையுடன் சந்திரசேகர சுவாமியும், விசாலாட்சி அம்பிகையும் தனித்தனியாக குதிரை வாகனத்தில் அலங்காரமாகினர்.
அப்போது சுந்தரராஜ பெருமாள் கோயிலில் இரவு 10:00 மணிக்கு நிச்சயதார்த்த விழா நடந்தது. தொடர்ந்து சுவாமி, அம்பாள் எதிர் எதிர் திசையில் அம்பு எய்தும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
இன்று காலை விசாலாட்சி அம்பிகை தபசு திருக்கோலத்தில் அருள் பாலிக்க உள்ளார். மேலும் மாலையில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
நாளை காலை 11:00 மணிக்கு சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடக்க இருக்கிறது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்திருந்தனர்.