/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் ஹைமாஸ் விளக்கு சீரமைப்பு
/
பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் ஹைமாஸ் விளக்கு சீரமைப்பு
ADDED : ஏப் 25, 2024 05:50 AM

பரமக்குடி : பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் ஹைமாஸ் விளக்குகள் சீரமைக்கப்பட்டதால் தினமலர் நாளிதழுக்கு பயணிகள் நன்றி தெரிவித்தனர்.
பரமக்குடி நகராட்சி பஸ் ஸ்டாண்டில் தினமும் ஏராளமான பஸ்கள் வந்து செல்கின்றன. மேலும் கிராமங்களில் இருந்து மாணவர்கள் உட்பட பல ஆயிரம் பேர் அன்றாட பணிக்கு வந்து செல்கின்றனர்.
பஸ் ஸ்டாண்டில் போதிய வெளிச்சம் இன்றி இருள் சூழந்திருந்தது. இங்கு அமைக்கப்பட்டுள்ள ஹைமாஸ் விளக்கு பழுதடைந்து எரியவில்லை. இது குறித்து ஏப்.18ல் தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக அதிகாரிகள் அனைத்து விளக்குகளையும் சீரமைத்தனர். பரமக்குடி பஸ் ஸ்டாண்டில் ஹைமாஸ் விளக்குகளை சீரமைக்க செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

