/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பிவைப்பு
/
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பிவைப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பிவைப்பு
ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் தொகுதிகளுக்கு அனுப்பிவைப்பு
ADDED : மார் 22, 2024 04:42 AM

ராமநாதபுரம்: -ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கு தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை அந்தந்த சட்டசபை தொகுதிகளுக்கு கட்சிப்பிரமுகர்கள் முன்னிலையில் அனுப்பி வைக்கப்பட்டது.
ராமநாதபுரம் லோக்சபா தொகுதிக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் கணினி மூலம் சுழற்சி முறையில் தேர்வு செய்து அனுப்பி வைக்கப்பட்டது.
கலெக்டர் விஷ்ணுசந்திரன், அனைத்து கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், திருவாடானை, பரமக்குடி (தனி), முதுகுளத்துார் சட்டசபை தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் நடந்தது.
கணினி மூலம் தேர்வு செய்யப்பட்ட 3121 மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 1808 கட்டுப்பாட்டு கருவிகளும், ஓட்டுப்போடுவதை உறுதி செய்யும் வி.வி.பாட் இயந்திரங்கள் 2186 ஆகியவை அந்தந்த சட்ட சபை தொகுதிகளில் பாதுகாக்கப்படும்.
இந் நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜூலு, பரமக்குடி சப் கலெக்டர் அபிலாஷா கவுர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் இளங்கோ (தேர்தல்) பங்கேற்றனர்.--------

