/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு பதில் கடலை பருப்பு விநியோகம்
/
ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு பதில் கடலை பருப்பு விநியோகம்
ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு பதில் கடலை பருப்பு விநியோகம்
ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு பதில் கடலை பருப்பு விநியோகம்
ADDED : ஆக 28, 2024 08:02 PM

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்ட ரேஷன் கடைகளில் துவரம் பருப்புக்கு பதில் கடலை பருப்பு வழங்கப்படுதால் நுகர்வோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
ரேஷன் கடைகளில் அரிசி, துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் ஒவ்வொரு மாதமும் இறுதி வரை வழங்கப்படுகிறது. துவரம் பருப்பு கிலோ ரூ.30க்கும், பாமாயில் லிட்டர் ரூ.25க்கும் விற்கப்படுகிறது. இவற்றை தமிழக அரசின் நுகர்பொருள் வாணிப கழகம் மொத்தமாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளுக்கு விநியோகம் செய்கிறது.
இந்நிலையில் விலைவாசி உயர்வாலும், பாமாயில், பருப்பு கொள்முதல் செய்வதில் தொடரும் குளறுபடியாலும் மே மாதம் முதல் பருப்பு, பாமாயில் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அனைத்து கார்டுதாரர்களுக்கும் அந்த மாதத்திற்குள் விநியோகம் செய்ய முடியவில்லை.
இந்நிலையில் தற்போது துவரம் பருப்புக்கு மாற்றாக ரேஷன் கடைகளில் கடலை பருப்பு விநியோகிக்கின்றனர். இது தொடர்பாக கேள்வி எழுப்பும் கார்டுதார்களுக்கு உரிய பதிலளிக்க முடியாமல் விற்பனையாளர்கள் சிரமப்படுகின்றனர். எனவே ரேஷன் கடைகளில் வழக்கம் போல தரமான துவரம் பருப்பு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.