/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அண்ணா தொழிற்சங்கம் துண்டு பிரசுரம் வழங்கல்
/
அண்ணா தொழிற்சங்கம் துண்டு பிரசுரம் வழங்கல்
ADDED : ஆக 27, 2024 05:42 AM
கமுதி : கமுதியில் அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கம் பேரவை சார்பில் தி.மு.க., அரசு தேர்தல் அறிக்கை மற்றும் கோரிக்கைகளை வலியுறுத்தி கமுதி பஸ் ஸ்டாண்டில் துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
காரைக்குடி தெற்கு மண்டல செயலாளர் சந்திரன் தலைமை வகித்தார். மத்திய சங்க துணைத்தலைவர் ஞானமணி முன்னிலை வகித்தார். போக்குவரத்து ஊழியர்களுக்கு 8 மாதம் சம்பளம் வழங்க வேண்டும். 10 சதவீதம் போனஸ் வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.
தி.மு.க., அரசு தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள போக்குவரத்து துறை திட்டங்களையும் முறையாக செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தினர். கிளைச் செயலாளர் வீரபாண்டியன், பொருளாளர் பழனிவேல் ராஜன் பங்கேற்றனர்.

