/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
விவசாயிகளுக்கு மானியத்தில் நெல் விதைகள் விநியோகம்
/
விவசாயிகளுக்கு மானியத்தில் நெல் விதைகள் விநியோகம்
ADDED : ஆக 30, 2024 10:11 PM
நயினார்கோவில்: பரமக்குடி அருகே நயினார்கோவில் வட்டாரத்தில் 25 ஆயிரம் ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கிறது. விவசாயிகளுக்கு மானியத்தில் நெல் விதைகள் வழங்கப்படுகிறது.
மாவட்டத்தில் மழை பொழிவு மற்றும் வானிலை சீராக உள்ளதால் விவசாயிகள் நெல் விதைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நயினார்கோவில் வேளாண் விரிவாக்க மையத்தில் உயர் விளைச்சல் தரும் விதைகள் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
இது குறித்து வேளாண் உதவி இயக்குநர் பானுபிரகாஷ் கூறியதாவது: உயர் விளைச்சல் ரகங்களான ஆர்.என்.ஆர். 15048, என்.எல்.ஆர். 34449, கோ 51, ஆடுதுறை 45 போன்ற நெல் ரகங்கள் 40 டன் இருப்பு உள்ளது. தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம், மற்றும் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் கிலோவிற்கு ரூ. 20 மானியம், விதை கிராமத் திட்டத்தில் 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது.
திரவ உயிர் உரங்கள் மற்றும் நெல் முன்னோட்ட கலவை 50 சதவீத மானியத்தில் வழங்கப்படுகிறது. பயறு வகைகள், எண்ணெய் வித்து, கேழ்வரகு விதைகள் இருப்பு உள்ளது என்றார்.