ADDED : செப் 14, 2024 11:51 PM

ராமநாதபுரம் : ராமநாதபுரம் டி.டி.விநாயகர் தொடக்கப்பள்ளியில் மதுரை மண்டலகலைப்பண்பாட்டுத்துறை, ஜவஹர் சிறுவர் மன்றம் சார்பில் மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகள் நடந்தது.
மதுரை கலைப்பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் கோபாலகிருஷ்ணன் உத்தரவில் மாவட்ட அளவிலான கலைத்திறன் போட்டிகள் ராமநாதபுரம் டி.டி.விநாயகர் தொடக்கப்பள்ளியில் நடந்தது. பள்ளி தாளாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார். ஆயிர வைசிய மகாசபை தலைவர் ஜெயராமன் போட்டிகளை துவக்கி வைத்தார். கலைப்பண்பாட்டுத்துறை அலுவலர் ரமீசாபேகம் வரவேற்றார்.
போட்டிகளில் 5 முதல் 8, 9 முதல் 12. 13 முதல் -16 வயது பிரிவுகளில் குரலிசை, பரத நாட்டியம்,ஓவியம், கிராமிய நடனபோட்டிகள் நடந்தது. 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். இதில் 9 முதல் 12, 13 முதல் 16 வயது பிரிவில் வெற்றி பெறுபவர்கள் மாநில போட்டிகளுக்கு அழைத்து செல்லப்படுவார்கள்.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை ராமநாதபுரம் ஜவஹர் மன்ற திட்ட செயலாளர் லோகசுப்பிரமணியன் செய்திருந்தார்.