sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ராமநாதபுரம்

/

 செப்.14ல் பள்ளி மாணவர்களுக்கு  மாவட்ட  கலைத்திறன் போட்டிகள் 

/

 செப்.14ல் பள்ளி மாணவர்களுக்கு  மாவட்ட  கலைத்திறன் போட்டிகள் 

 செப்.14ல் பள்ளி மாணவர்களுக்கு  மாவட்ட  கலைத்திறன் போட்டிகள் 

 செப்.14ல் பள்ளி மாணவர்களுக்கு  மாவட்ட  கலைத்திறன் போட்டிகள் 


ADDED : செப் 08, 2024 04:17 AM

Google News

ADDED : செப் 08, 2024 04:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்: தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் ஜவஹர் சிறுவர் மன்றம் நடத்தும் மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான கலைத்திறன் போட்டிகள் செப்.14ல்ராமநாதபுரம் டி.டி. விநாயகர் துவக்கப்பள்ளியில் நடக்கிறது.

பள்ளி சிறார்களிடையே மறைந்து கிடக்கும்கலைத்திறன்களை வெளிக்கொணரும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், கிராமிய நடனம் ஆகிய நான்கு கலைப்பிரிவுகளிலும் 5 முதல் 8, 9 முதல் 12, 13 முதல் 16 வயது பிரிவுகளிலும் மாணவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படுகிறது.

வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கி ஊக்கப்படுத்தப்படுகிறது. 9 முதல் 12, 13 முதல் 16 வயது பிரிவில் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான கலைப்போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.

முதல் கட்டமாக 5 முதல் 8, 9 முதல் 12, 13 முதல் 16 வயது வரையிலான மூன்று பிரிவு மாணவர்களுக்கு கலைப்போட்டிகள் ராமநாதபுரம் டி.டி.விநாயகர் பள்ளியில் செப்.14ல் நடக்கிறது.

டி.டி.விநாயகர் தொடக்கப்பள்ளியில் காலை 9:00 மணி முதல் முன் பதிவு நடக்கவுள்ளது. போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்கள் பெயர், வயது, பிறந்த தேதி, வீட்டு முகவரி, பள்ளியின் பெயர் ஆகிய விபரங்களுடன் வயது சான்றிதழுடன் வர வேண்டும்.

மூன்று பிரிவு மாணவர்களுக்கும் காலை 9:00 முதல் மாலை 4:30 வரை பரத நாட்டியம், கிராமிய நடனம், குரலிசை ஆகிய போட்டிகள் நடக்கும். ஓவியப் போட்டி காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடக்கும்.

போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு பங்கேற்பு சான்றிதழ், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்.

மேலும் விபரங்களுக்கு 0452-256 6420 மற்றும்98425 67308 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us