/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் டூவீலர்களால் இடையூறு
/
சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் டூவீலர்களால் இடையூறு
ADDED : மார் 30, 2024 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி, : சாயல்குடி பேரூராட்சி பஸ் ஸ்டாண்டில் பஸ்கள் நிறுத்தப்படும் இடங்களில் டூவீலர்களை வரிசையாக நிறுத்திச் செல்வதால் பஸ்களை நிறுத்துவதில் இடையூறு ஏற்படுகிறது.
சாயல்குடி பஸ் ஸ்டாண்டில் ஏராளமான வணிக வளாகங்கள், கடைகள், சந்தைப்பேட்டை உள்ளன. சாயல்குடி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து டூவீலர்களில் வருபவர்கள் டூவீலரை கடைகளின் முன்பாகவும், பஸ் நிறுத்தும் இடங்களிலும் நிறுத்திவிட்டு செல்வதால் நெரிசல் ஏற்படுகிறது.
எனவே சாயல்குடி பேரூராட்சி நிர்வாகத்தினர் நோ பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து நடவடிகை எடுக்க வேண்டும்.

