/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தி.மு.க., கூட்டணியில் புறக்கணிக்கப்படும் இந்திய கம்யூ.,கட்சி : தொண்டர்கள் குமுறல்

ADDED : ஏப் 06, 2024 04:04 AM
சாயல்குடி, : சாயல்குடியில் தி.மு.க., கூட்டணியில் இந்திய கம்யூ., கட்சிக்குரிய மரியாதை தரவில்லை என தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தி.மு.க., கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சார்பில், வேட்பாளராக நவாஸ் கனி மீண்டும் போட்டியிடுகிறார்.
சாயல்குடியில் தி.மு.க., கூட்டணி கட்சியில் உள்ள அனைத்து கட்சிகளையும் ஒருங்கிணைத்து தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டது.
இந்நிலையில் அங்கு இந்திய கம்யூ., கட்சிக் கொடி இல்லை என தொண்டர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து இந்திய கம்யூ., கட்சியின் முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் அந்தோணிசாமி கூறியதாவது: நாங்கள் தி.மு.க., கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் எங்களது கட்சிக்கொடி தேர்தல் அலுவலகத்தில் இல்லை.
இதுகுறித்து தி.மு.க., மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினரிடம் கேட்டால் எங்களுக்கு மாவட்ட தலைமை குழு போதும் எனக் கூறுகின்றனர்.
எங்களை உரிய முறையில் மதிப்பதில்லை. எங்களை புறக்கணிக்காமல் கூட்டணி கட்சி நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என்றார்.