/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்
/
தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம்
ADDED : செப் 06, 2024 04:48 AM

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலத்தில் நகர் தி.மு.க.,சார்பில் நடந்த பொது உறுப்பினர் கூட்டத்தில் கருணாநிதி நுாற்றாண்டு நாணயம் வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆர்.எஸ்.மங்கலம் நகர் தி.மு.க., சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம் நகர் அவை தலைவர் தென்றல் ஜலீல் தலைமையில் நடந்தது.
மாநில விவசாய அணி துணைச் செயலாளர் நல்ல சேதுபதி, தெற்கு ஒன்றிய செயலாளர் மோகன், நகர் செயலாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர்.
லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற உழைத்த கட்சி நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு நாணயம் வெளியிட்ட மத்திய அரசுக்கு நன்றி தெரிவித்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து இமானுவேல் சேகரன் அரசு விழாவில் பங்கேற்க வரும் அமைச்சர் உதயநிதி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளை வரவேற்பது குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டத்தில் நகர் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.