/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
தி.மு.க., நாம் தமிழர் தொப்பிகள் பறிமுதல்
/
தி.மு.க., நாம் தமிழர் தொப்பிகள் பறிமுதல்
ADDED : ஏப் 08, 2024 11:56 PM
பரமக்குடி : பரமக்குடியில் தி.மு.க., மற்றும் நாம் தமிழர் கட்சிகளின் தொப்பிகள், டீ-சர்ட் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
பரமக்குடி அருகே பார்த்திபனுார் மருச்சுக்கட்டி சோதனை சாவடியில் நிலையான கண்காணிப்பு குழு தேர்தல் அலுவலர் கண்ணன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த வழியாக சென்ற மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி வாகனத்தை சோதனையிட்ட போது முதல்வர் ஸ்டாலின் புகைப்படம் பதித்த 514 தொப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
*எமனேஸ்வரம் காந்திநகர் பகுதியில் பறக்கும் படை அலுவலர் கண்ணன் தலைமையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அந்த வழியாக சென்ற நாம்தமிழர் இளைஞரணி செயலாளர் பங்குராஜாவின் காரை சோதனையிட்டனர். அதில் டீ-சர்ட், தொப்பி, கொடி, நோட்டீசை பறிமுதல் செய்தனர்.

