ADDED : ஆக 25, 2024 10:48 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமநாதபுரம்:
-ராமநாதபுரத்தில் நடந்த தமிழக முஸ்லிம் முன்னேற்றக்கழகத்தின் 30ம் ஆண்டு விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.
விழாவில் மாவட்ட தலைவர் இப்ராஹிம் அலுவலகத்தில் கொடியேற்றினார். வாலாந்தரவையில் இயங்கி வரும் செஸ்ட் ஏஞ்சலின் மன வளர்ச்சி குன்றி, முதியோர் காப்பகத்தில் உணவு வழங்கப்பட்டது.
திருமணம், மருத்துவம், கல்வி ஆகியவற்றிற்கு உதவித்தொகை வழங்கப்பட்டது. இந் நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் அப்துல்ரஹீம், மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது உட்பட பலர் பங்கேற்றனர். ம.ம.க., நகர் செயலாளர் செய்யது அபுபக்கர் ஏற்பாடுகளை செய்தார்.

