/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ராமநாதபுரத்தில் டாக்டர்கள் சங்கம் தர்ணா போராட்டம்
/
ராமநாதபுரத்தில் டாக்டர்கள் சங்கம் தர்ணா போராட்டம்
ADDED : ஆக 18, 2024 04:04 AM

ராமநாதபுரம் : -ராமநாதபுரத்தில் இந்திய மருத்துவர்கள் சங்கம், தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்கம் சார்பில் டாக்டர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு சட்டம் கொண்டு வரவும், கோல்கட்டா ஆர்.ஜி-கார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் முதுகலை மருத்துவ பயிற்சி இளம்பெண் டாக்டரை பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் நடந்த தர்ணா போராட்டத்தில் டாக்டர்கள் தங்கள் பாதுகாப்பை வலியுறுத்தி நேற்று காலை 6:00 முதல் இன்று காலை 6:00 மணி வரை அவசரமில்லா சேவைகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.
இந்திய மருத்துவர்கள் சங்கம் ராமநாதபுரம் கிளைத்தலைவர் டாக்டர் அரவிந்த்த ராஜ் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க ராமநாதபுரம் கிளைத் தலைவர் மலையரசு முன்னிலை வகித்தார்.
இந்திய மருத்துவர் சங்கம் கவுரவ செயலாளர் ஜோசப்ராஜன், நிதி செயலாளர் அறிவழகன், மாநில செயற்குழு உறுப்பினர் சின்னதுரை அப்துல்லா, தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின் ராமநாதபுரம் கிளை செயலாளர்கள் சிவக்குமார், முத்தரசன், பொருளாளர் கிருபாகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.