/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆடுகளை விரட்டி கடிக்கும் நாய்கள்
/
ஆடுகளை விரட்டி கடிக்கும் நாய்கள்
ADDED : ஏப் 01, 2024 06:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கீழக்கரை : -கீழக்கரை நகராட்சி கிழக்கு தெரு பாத்திமா காலனியில் கூட்டமாக திரியும் வெறி நாய்களால் மக்கள் அச்சப்படுகின்றனர்.
நேற்று முன்தினம் ஒரு வெள்ளாட்டை வயிற்றுப் பகுதியில் கடித்து பெரிய காயத்தை நாய்கள் ஏற்படுத்தின. அப்பகுதியில் ஏராளமான கோழிகளையும் நாய்கள் வேட்டையாடி வருகின்றன. இதனால் ஆடு மற்றும் கோழி வளர்ப்போர் அச்சமடைந்துள்ளனர்.
எனவே கீழக்கரை நகராட்சி நிர்வாகத்தினர் பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள தெருநாய்களை பிடித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

