/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மாநில அளவிலான பேச்சு போட்டியில் தொண்டி அரசுப்பள்ளி மாணவி முதலிடம்
/
மாநில அளவிலான பேச்சு போட்டியில் தொண்டி அரசுப்பள்ளி மாணவி முதலிடம்
மாநில அளவிலான பேச்சு போட்டியில் தொண்டி அரசுப்பள்ளி மாணவி முதலிடம்
மாநில அளவிலான பேச்சு போட்டியில் தொண்டி அரசுப்பள்ளி மாணவி முதலிடம்
ADDED : ஏப் 30, 2024 10:43 PM

தொண்டி, - பேச்சு போட்டியில் அரசு தொடக்கப்பள்ளி இரண்டாம் வகுப்பு மாணவி மாநில அளவில் முதலிடம் பெற்றதால் விருது வழங்கப்பட்டது.
தொண்டி முகமதுகாசிம் தெருவை சேர்ந்தவர் அசாருதீன் மகள் அதிபா 6. இவர் தொண்டி அரசு தொடக்கபள்ளியில் (மேற்கு) இரண்டாம் வகுப்பு படிக்கிறார். ஜாக்கி புக் ஆப் வேர்ல்ட் சார்பில் ஜூம் செயலி வழியாக பேச்சு போட்டி நடந்தது.
'எங்கும் தமிழ், எதிலும் தமிழ்,' என்ற தலைப்பில் நடந்த பேச்சு போட்டியில் மாநில அளவில் முதலிடத்தில் வெற்றி பெற்றார். முதல் சுற்றில் வெற்றி பெறுபவருக்கு இரண்டாம் சுற்று வாய்ப்பு அளிக்கப்படும். அதிலும் அதிபா வெற்றி பெற்றார். பாராட்டு விழா சீர்காழியில் நடந்தது. அதில் 2024க்கான இளம் பேச்சாளர் விருது வழங்கப்பட்டது.
தொண்டி அரசு தொடக்கபள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி கூறுகையில், விடுமுறை நாட்களில் பெற்றோர் வாட்ஸ் ஆப்பிற்கு பாடங்கள் அனுப்பப்படும். இதில் மாணவர்களுக்கு நினைவூட்டல் செய்யப்படுவதால் விடுமுறைக்கு பின் வகுப்புகளில் எளிதாக பாடம் கற்க வசதியாக இருக்கும். இதில் அதிபா மற்றும் மாணவன் ராகுல் பல்வேறு விருதுகளை பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர் என்றார்.