/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மதியம் அனல் காற்று வீசுது தேவையின்றி வெளியே வராதீங்க: கலெக்டர் விஷ்ணு சந்திரன் அறிவுரை

ADDED : ஏப் 01, 2024 10:16 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டத்தில் அனல் காற்று வீசும் காலங்களில் மக்கள் மதியம் 12:00 முதல் 3:00 மணி வரை தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
அனல் காற்று வீசும் போது பயணம் செய்ய நேரிட்டால் மக்கள் குடிநீர் எடுத்துச் செல்வதுடன் கண்ணாடி மற்றும் காலணி அணிந்து குடையுடன் பாதுகாப்பாக செல்ல வேண்டும். தாகம் எடுக்காவிட்டாலும் கூட அவ்வப்போது போதுமான தண்ணீர் அருந்தவும்.
வீட்டில் தயாரித்த நீர் மோர், லஸ்ஸி, புளித்த சோற்று தண்ணீர், எலுமிச்சை சாறு போன்ற பானங்களை அருந்த வேண்டும்.
வெளிர் நிறமுள்ள காற்றோட்டமான பருத்தி ஆடைகள் அணிய வேண்டும். அடைக்கப்பட்ட வாகனங்களில் வெப்பம் அதிகமாகி குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து விளைவிக்கக்கூடும்.
குழந்தைகளின் சிறுநீரை சோதித்து பார்க்கவும். மஞ்சள் நிறமுள்ள சிறுநீர் நீரிழப்பை குறிக்கலாம். உடனே அருகில் உள்ள அரசு மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ளவும். வீடுகளில் தனியே வசிக்கும் முதியவர்களின் உடல் நிலையை தினமும் இருமுறை சரிபார்க்கவும்.
வெப்பத்தை தணிக்க ஈரமான துண்டுகளை கழுத்து மற்றும் கைகளில் வைக்கவும், குளிர்ந்த நீரில் குளிப்பதுடன் போதிய இடைவேளைகளில் நீர் அருந்தவும். பாதுகாப்பு குறிப்புகளை கடைப்பிடித்து மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றார்.