/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மூன்று பேருக்கும் ஓட்டளிக்க கூடாது : பாடம் எடுத்த கீர்த்திகா
/
மூன்று பேருக்கும் ஓட்டளிக்க கூடாது : பாடம் எடுத்த கீர்த்திகா
மூன்று பேருக்கும் ஓட்டளிக்க கூடாது : பாடம் எடுத்த கீர்த்திகா
மூன்று பேருக்கும் ஓட்டளிக்க கூடாது : பாடம் எடுத்த கீர்த்திகா
ADDED : மார் 26, 2024 11:41 PM
பரமக்குடி : ராமநாதபுரம் லோக்சபா தேர்தலையொட்டி பரமக்குடி சட்டசபை தொகுதி அ.தி.மு.க., ஊழியர் கூட்டம் பரமக்குடியில் நடந்தது.
மகளிர் அணி இணை ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகா பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் போதைப் பொருள் கலாசாரம் அதிகரித்துள்ளது. நவாஸ்கனி ஐந்து ஆண்டுகளில் சரியாக செயல்படாதது அவர்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். கடந்த முறை தாமரை சின்னத்தில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் 3 லட்சத்திற்கும் மேல் வாக்குகள் பெற்றார்.
அதில் சில வாக்குகள் சென்றாலும் மற்ற அனைத்து வாக்குகளும் அ.தி.மு.க., விற்கு கிடைக்கும். பன்னீர்செல்வம் ஒரு சமுதாய ஓட்டுகளை நம்பி வந்துள்ளார்.
அவர் வெற்றி பெற்று எம்.பி., ஆனாலும் 2 ஆண்டுகளில் மீண்டும் எம்.எல்.ஏ., வாக போட்டியிடுவார். இதனால் அவருக்கு அளித்த வாக்குகள் அனைத்தும் வீணாகும்.
மேலும் நாம் தமிழர் என்று சிலர் வருகின்றனர். இங்கு வாழும் அனைத்து மொழி பேசும் சமுதாய மக்களும் தமிழர்கள் தான்.
ஆகவே இந்த மூன்று பேருக்கும் ஓட்டளிக்ககூடாது என்றார்.