/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
கோயில் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
/
கோயில் விழாவில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
ADDED : ஆக 23, 2024 04:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாயல்குடி: -சாயல்குடி அருகே நொண்டி கருப்பண்ணசுவாமி கோயிலில் 19 ஆம் ஆண்டு வருடாபிஷேக விழா மற்றும் பொங்கல் விழா நடந்தது.
விழாவை முன்னிட்டு மூலவர் செல்வ விநாயகர், முத்தாலம்மன், நொண்டி கருப்பண்ணசாமி, குணவல்லி உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடந்தது. நேற்று இரண்டு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடந்தது. ராமநாதபுரம், துாத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து 30க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகள் பங்கேற்றன. முதல் நான்கு இடங்களை பெற்ற மாட்டுவண்டி பந்தய வீரர்களுக்கு ரொக்கப் பணம் நினைவு பரிசு வழங்கப்பட்டது.