/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
ஆவணி அவிட்டத்தில் புதிய பூணுால் அணிவிப்பு
/
ஆவணி அவிட்டத்தில் புதிய பூணுால் அணிவிப்பு
ADDED : ஆக 20, 2024 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராமேஸ்வரம் : ஆவணி அவிட்டத்தையொட்டி ராமேஸ்வரத்தில் புரோகிதர்கள் புதிய பூணுால் அணிந்தனர்.
நேற்று பவுர்ணமி ஆவணி அவிட்டத்தையொட்டி ராமேஸ்வரம் காஞ்சி சங்கராச்சாரியார் மடத்தில் நிர்வாகி சாச்சா மற்றும் சிருங்கேரி சுவாமிகள் மடத்தில் 200க்கு மேற்பட்ட புரோகிதர்கள் காயத்ரி மந்திரம் முழங்க பழைய பூணுாலை அகற்றி புதிய பூணுாலை அணிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
வேத கலாச்சார முறைப்படி ஒவ்வொரு ஆண்டும் ஆவணி பவுர்ணமி அன்று புதிதாக பூணுால் அணிந்து கொள்பவர்களும், ஏற்கனவே அணிந்தவர்கள் புதிய பூணுால் அணிவது வழக்கமான ஐதீகம் என புரோகிதர்கள் தெரிவித்தனர்.

