/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காவிரி நீரை திருடும் மர்ம கும்பல் நடவடிக்கை எடுக்குமா குடிநீர் வடிகால் வாரியம்

ADDED : ஜூலை 25, 2024 04:08 AM
கடலாடி: -கடலாடி அருகே ஆப்பனுார் ஊராட்சிக்கு செல்லும் பகுதியில் காவிரி கூட்டு குடிநீர் செல்லும் பிரதான குழாயை விஷமிகள் சேதப்படுத்தி தண்ணீரை வீணாக்கும் செயல் தொடர்கிறது.
ஆப்பனுார் பயணியர் நிழற்குடை அருகே கடலாடி செல்லும் பிரதான ரோட்டில் ஊருக்கு செல்லும் சாலையில் இடது புறமாக உள்ள குழாயை சேதப்படுத்தியுள்ளனர். குழாயின் அடிப்பகுதியில் வேறொரு குழாயை செலுத்தி அந்த பகுதியில் வால்வு மூலமாக குடிநீரை தேவைக்கு திறந்து விட்டு தண்ணீரை திருடும் போக்கு தொடர்கிறது.
சட்ட விரோதமாக காவிரி நீரை பயன்படுத்தி கட்டடப் பணிகளுக்கும், விவசாயத்திற்கும், கரிமூட்டத்திற்கும் பயன்படுத்துகின்றனர். இதனால் ஆப்பனுாரை சுற்றியுள்ள அரியநாதபுரம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்லக்கூடிய குடிநீர் செல்வதில் பெரும் தொய்வு ஏற்படுகிறது.
சில நேரங்களில் காவிரி நீர் பற்றாக்குறை நிலவுகிறது. எனவே தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தினர் நீண்ட நாட்களாக நிலவும் இப்பிரச்னைக்கு தொடர் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.