/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
பரமக்குடி நகராட்சி 33வது வார்டில் குடிநீர் தட்டுப்பாடு வரி செலுத்தும் மக்கள் ஏக்கம்

ADDED : மே 25, 2024 06:05 AM
பரமக்குடி : பரமக்குடி நகராட்சி 33-வது வார்டில் பல குடும்பங்கள் குடிநீர் கிடைக்காமல் தவிக்கும் சூழல் உள்ளது.
பரமக்குடி நகராட்சிக்குட்பட்ட 33 வது வார்டு போர்டிங் ரோடு பின்புறம் 40க்கும் மேற்பட்டோர் குடிநீர் இணைப்பு பெற்று வரி செலுத்தி வருகின்றனர். இப்பகுதிக்கு மெயின் ரோடுகளில் மட்டும் உள்ள குழாய்களில் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் சந்து பகுதிகளில் குடிநீர் வருவதில்லை. இதனால் தொடர்ந்து குடிநீர் வரி செலுத்தி வரும் நிலையில் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பில் உள்ளனர்.
இது குறித்து நகராட்சி கமிஷனரிடம் பல முறை முறையிட்டும் எந்த பலனும் இல்லை. ஆகவே குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.