/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
மகாசக்திபுரத்திற்கு குடிநீர் சப்ளை
/
மகாசக்திபுரத்திற்கு குடிநீர் சப்ளை
ADDED : ஏப் 12, 2024 10:37 PM

தொண்டி : தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக தொண்டி மகாசக்திபுரத்தில்குடிநீர் சப்ளை செய்யப்பட்டது.
தொண்டி மகாசக்திபுரத்தில் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த சில நாட்களாக குடிநீர் சப்ளை இல்லாததால்அப்பகுதி மக்கள் பாதிக்கப்பட்டனர்.
மேலும் சாக்கடை கலந்த நீரால் துர்நாற்றம் வீசியதால் வீட்டு உபயோகத்திற்கு கூட பயன்படுத்த முடியாமல் தவித்தனர்.
அதனை தொடர்ந்து அப்பகுதி பெண்கள் ஏப்.10ல் தொண்டி பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதுகுறித்துதினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டது. சாக்கடை கலக்காமல் நீர் வருவதால் தினமலர் நாளிதழுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர்.

