ADDED : ஜூலை 14, 2026 07:11 PM
அ நிறம் | அளவு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் புறநகர் போக்குவரத்து பணிமனை அருகே ஆட்டோ டிரைவர்கள், போக்குவரத்து தொழிளாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட ஆட்டோ டிரைவர் சங்க பொருளாளர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ஆனந்த், அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்க செயலாளர் பாஸ்கரன், சி.ஐ.டி.யு., செயலாளர் சந்தானம் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வு, எரிபொருளில் எத்தனால் கலக்கும் மத்திய அரசின் முடிவை கைவிடுவது, ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்துவது, போக்குவரத்து கழகத்தை தனியார் மயமாக்குவதை நிறுத்துவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். ––
