/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
வறட்சியால் வற்றியது பெரிய கண்மாய் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்
/
வறட்சியால் வற்றியது பெரிய கண்மாய் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்
வறட்சியால் வற்றியது பெரிய கண்மாய் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்
வறட்சியால் வற்றியது பெரிய கண்மாய் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம்
ADDED : ஜூலை 10, 2024 05:17 AM

ஆர்.எஸ்.மங்கலம் ; ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாயில் தேங்கிய தண்ணீர் வறட்சியால் வற்றி வருவதால் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாயாகவும், நாரை தொடர்ச்சியாக பறக்க முடியாத 48 குருச்சிகளை (குருச்சி-- கிராமங்கள்) கொண்ட கண்மாய் என்ற சிறப்பு பெற்றது ஆர்.எஸ்.மங்கலம் பெரிய கண்மாய். 6.5 அடி உயரம் கொண்ட இந்த கண்மாயில் தேக்கப்படும் 1205 மில்லியன் கன அடி தண்ணீரால் 12 ஆயிரத்து 142 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றன.
பெரிய கண்மாயில் ஒரு கி.மீ.,க்கு ஒரு பாசன மடை வீதம் 20 பாசன மடைகள் அமைந்துள்ளன. கடந்த ஆண்டு பெய்த மழையால் 5 அடி வரை தண்ணீர் தேங்கி இருந்தது. தொடர்ந்து விவசாயத்திற்கு பயன்படுத்திய பின் கடந்த ஏப்., மாதம் ஒரு அடிக்கும் குறைவான நீர் இருந்தது.
இந்நிலையில் வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீரால் 2 அடிக்கும் மேல் நீர்மட்டம் உயர்ந்தது. அதன் பின் தொடர்ந்து நிலவும் வறட்சியால் கண்மாயில் தண்ணீர் விரைவாக வற்றியதால் தற்போது பள்ளங்களில் மட்டுமே தண்ணீர் தேங்கி உள்ளது.
இதனால் தற்போது பெரிய கண்மாயை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகளில் உள்ள திறந்த நிலை கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நிலத்தடி நீர்மட்டம் 5 முதல் 10 அடி வரை குறைந்துள்ளது. இந்நிலையில் தொடர்ந்து வறட்சி நிலவுவதால் நிலத்தடி நீர்மட்டம் மேலும் பாதிக்கும் என்பதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.