ADDED : ஜூன் 29, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரமக்குடி : பரமக்குடி அருகே நயினார்கோவில் ஒன்றியம் காரடர்ந்தகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் வட்ட சட்டப் பணிக்குழு சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
தலைமையாசிரியர் முருகேசன் தலைமை வகித்தார். நயினார்கோவில் போலீஸ் சிறப்பு எஸ்.ஐ., சந்திரசேகரன், வக்கீல் பிரபு பங்கேற்று பேசினர். மாணவர்கள் போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்தனர். சட்ட தன்னார்வலர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.

