/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு ஊர்வலம்
/
போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஆக 12, 2024 11:59 PM

பரமக்குடி : பரமக்குடி அருகே கமுதக்குடியில் செயல்படும் மவுன்ட் லிட்ரா ஜி பள்ளி மற்றும் தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறை (தூத்துக்குடி மண்டலம்) மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் இணைந்து போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு ஊர்வலம் நடத்தினர்.
பரமக்குடி மவுன்ட் லிட்ரா ஜி பள்ளி சேர்மன் பூமிநாதன் தலைமை வகித்தார். மருந்து வணிகர் சங்க செயலாளர் நாகரெத்தினம், நகர் தலைவர் இளங்கோவன், பள்ளி பொருளாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தனர். முதல்வர் பரணி ஸ்ரீ வரவேற்றார்.
அப்போது பரமக்குடி ஓட்டப்பாலம் பகுதியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டு காந்தி சிலை அருகே நிறைவடைந்தது. போதை ஒழிப்பு பதாகைகளை ஏந்திச் சென்றனர். அங்கு அனைத்து பள்ளி மாணவர்கள் போதையில்லா தமிழகம் உருவாக்கும் வகையில் உறுதிமொழி எடுத்தனர்.
பரமக்குடி சரக மருந்து ஆய்வாளர் பூமாதேவி, சங்க செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சாகுல் ஹமீது உட்பட பள்ளி மாணவர்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
*பரமக்குடி அரசு கலை கல்லுாரியில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு ஸ்லோகன் எழுதும் போட்டி நடத்தப்பட்டது. இதில் 3 மாணவர்கள் பரிசு பெற்றனர். கல்லுாரி முதல்வர் சிவக்குமார் தலைமை வகித்தார். சப்-கலெக்டர் அபிலாஷா கவுர், தாசில்தார் சாந்தி கலந்து கொண்டனர்.

