/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
போதைப்பொருள் இல்லா தமிழகம்: மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
/
போதைப்பொருள் இல்லா தமிழகம்: மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
போதைப்பொருள் இல்லா தமிழகம்: மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
போதைப்பொருள் இல்லா தமிழகம்: மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு
ADDED : ஆக 13, 2024 11:20 PM
ராமநாதபுரம் : ராமநாதபுரம் கேணிக்கரை செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு என்ற தலைப்பில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை பல்கலையில் காணொலி காட்சி வாயிலாக போதை பொருள் இல்லாத தமிழ்நாடு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நேரடி ஒளிபரப்பு செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.
முதல்வர் ஸ்டாலின் வாசித்த போது கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், எஸ்.பி., சந்தீஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரேணுகா உட்பட அரசு அலுவலர்கள், மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.
உத்தரகோசமங்கை
அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி எடுக்கப்பட்டது. உத்தரகோசமங்கை போலீஸ் ஸ்டேஷன் எஸ்.ஐ., ராமையா, தர்மர், சரவணன் ஆகியோர் பள்ளியில் மாணவர்களிடம் போதையால் ஏற்படும் தீமைகள் மற்றும் எதிர்காலத்தில் உடல் நலத்திற்கு ஏற்படும் தீமைகள், போதைப் பழக்கங்களால் படிப்பில் கவனம் செலுத்தாத நிலை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தலைமை ஆசிரியர் ராணி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் ராஜ்குமார், பட்டதாரி ஆசிரியர் தர்மராஜ், உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ், மகாலிங்கம் பங்கேற்றனர். கணித பட்டதாரி ஆசிரியர் மதியழகன் நன்றி கூறினார்.