ADDED : ஆக 15, 2024 03:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாடானை, : திருவாடானை அருகே ஓரியூர் புனித அருளானந்தர் மேல்நிலைப்பள்ளியில் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. தாளாளர் சைமன்ராஜ் தலைமை வகித்தார்.
எஸ்.பி.பட்டினம் எஸ்.ஐ., மாரி, போதை பொருட்களின் தீமைகள், அவற்றை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள், குழந்தைகளுக்கு எதிரான போக்சோ சட்டம், புதிய குற்றவியல் சட்டத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு, சட்டப்பிரிவுகள் மற்றும் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விளக்கம் அளித்தார். எஸ்.எஸ்.ஐ., காளீஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர். மாணவர்கள் போதை பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி எடுத்தனர்.