/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
காற்றில் ஆட்டம் காணும் காய்ந்த மரங்கள்: விபத்து பீதியில் மக்கள்
/
காற்றில் ஆட்டம் காணும் காய்ந்த மரங்கள்: விபத்து பீதியில் மக்கள்
காற்றில் ஆட்டம் காணும் காய்ந்த மரங்கள்: விபத்து பீதியில் மக்கள்
காற்றில் ஆட்டம் காணும் காய்ந்த மரங்கள்: விபத்து பீதியில் மக்கள்
ADDED : ஜூன் 21, 2024 04:11 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர், புறநகர் பகுதிகளில் ரோட்டோரத்தில் காய்ந்து பட்டுப்போன மரங்கள், அதன் கிளைகள் காற்றில் விழுவதால் வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
ராமநாதபுரம் நகர் மதுரை ரோடு, ராமேஸ்வரம் ரோடு, கிழக்கு கடற்கரை சாலை, நயினார்கோவில் ரோடு ஆகிய இடங்களில் ரோட்டோரத்தில் நிழல்தரும் மரங்கள் ஏராளமாக உள்ளன. இவற்றில் சில போதிய தண்ணீர் கிடைக்காமல் அடியோடும், மரக்கிளைகள் மட்டும் காய்ந்த நிலையில் காணப்படுகிறது.
தற்போது பலத்த காற்று வீசுவதால் சில இடங்களில் மரங்கள், அதன் கிளைகள் முறிந்து ரோட்டில் விழுகின்றன.
நேற்று குமரய்யா கோயில் அருகே ராமேஸ்வரம் ரோட்டில் காற்றில் காய்ந்த மரம் ஒன்று சாய்ந்து விழுந்தது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இருப்பினும் போக்குவரத்து நிறைந்த இடங்களில் காய்ந்து பட்டுப்போன நிலையில் உள்ள மரங்கள், அதன் கிளைகளை அகற்ற நெடுஞ்சாலைத்துறை, நகராட்சி, ஊராட்சி நிர்வாக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.