/
உள்ளூர் செய்திகள்
/
ராமநாதபுரம்
/
அரண்மனை ரோடு ஆக்கிரமிப்பால் நடக்க கூட வழியின்றி மக்கள் அவதி
/
அரண்மனை ரோடு ஆக்கிரமிப்பால் நடக்க கூட வழியின்றி மக்கள் அவதி
அரண்மனை ரோடு ஆக்கிரமிப்பால் நடக்க கூட வழியின்றி மக்கள் அவதி
அரண்மனை ரோடு ஆக்கிரமிப்பால் நடக்க கூட வழியின்றி மக்கள் அவதி
ADDED : ஜூலை 05, 2024 04:41 AM

ராமநாதபுரம்: ராமநாதபுரம் நகர் அரண்மனை ரோட்டோரம் நடை பாதை ஆக்கிரமிப்பால் மக்கள் சிரமப்படுகின்றனர்.
ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியாக அரண்மனை ரோடுஉள்ளது. இங்கு கடைகள், வணிக வளாகங்கள், ஏராளமான தரைக்கடைகள் செயல்படுகின்றன. எப்போதுமே போக்குவரத்து மிகுந்த அரண்மனை ரோட்டோரத்தில் தரைக்கடை, தள்ளுவண்டிகளில் பழங்கள், காய்கறிகள் விற்பனை செய்கின்றனர்.
இவர்களில் சிலர் வாகனங்கள் செல்லும் வளைவான இடங்களில் நடை பாதையை ஆக்கிரமித்து வியாபாரம் செய்வதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு சிரமப்படுகின்றனர். மேலும் வேகமாக வாகனங்கள் வரும் போது விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே அரண்மனை ரோட்டில் ஒதுக்கப்பட்ட இடத்தில் போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல் சிறு வியாபாரிகள் கடைகள் வைக்க வேண்டும். அதற்கு நகராட்சி நிர்வாகம், போலீசார் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.